Dec 20, 2025
Thisaigal NewsYouTube
வல்லரசு நாடுகளால் வியூக சகாவாக மலேசியா மதிக்கப்படுகிறது
அரசியல்

வல்லரசு நாடுகளால் வியூக சகாவாக மலேசியா மதிக்கப்படுகிறது

Share:

டிச. 30-

உலக வல்லரசு நாடுகளின் வியூக சகாவாக மலேசியா தற்போது அங்கீகரிக்கப்பட்டு, மதிக்கப்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய விவகாரங்களை முன்னிறுத்தி, போராடி வருவதன் காரணமாக மலேசியா தற்போது வல்லரசு நாடுகளால் மிகுந்த கவன ஈர்ப்புக்குரிய நாடாக நோக்கப்படுகிறது என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனர்கள் விவகாரத்தில் நீதி, நியாயம் கோரி மலேசியா முன்னெடுத்த போராட்டத்தில் நியாயம் இருப்பதாகவே உலக நாடுகள் கருதுகின்றன.

தவிர இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து தாம் மேற்கொண்ட வெளிநாட்டு வருகை மற்றும் முக்கியத் தலைவர்களின் மலேசிய வருகை உலக நாடுகளுடனான உறவை வலுப்படுத்தியிருப்பதுடன் மலேசியாவின் முதலீடு மற்றும் ஏற்றுமதியையும் அதிகரிக்க செய்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News