Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதே, தமது இலக்கு! ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வாக்குறுதி
அரசியல்

Share:

கோலாலம்பூர், ஜூன் 13-

வரவிருக்கும் சுங்கை பக்காப் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், தாம் வெற்றி பெற்றால், அத்தொகுதியில் நிலவிவரும் நீர் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் ஜோஹரி அரிஃபின் வாக்குறுதி அளித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித தீர்வுகளும் இன்றி நீடித்துவரும் அப்பிரச்சனைக்கு, கூட்டரசு அரசாங்கம் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்துள்ளதை, தாம் ஓர் அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் அவர் கூறினார்.

சுங்கை பக்காப் தொகுதியில், வீடமைப்பு திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில், நீர் விநியோகத்தின் அளவு இன்னமும் சிறிதாகவே இருந்துவருகின்றது.

அப்பிரச்சனைக்கு தீர்வு காண, மறைந்த நோர் ஜம்ரி லத்தீஃப் உள்பட இதற்கு முந்தைய சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்திருந்த முன்னெடுப்பை தாம் தொடரப்போவதாகவும் ஜூஹாரி குறிப்பிட்டார்.

Related News

பாஸ் கட்சிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கம் சாட்டையடி கொடுக்க  வேண்டும்

சிரம்பான் ஜெயா: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தனின் வெற்றியை இந்திய வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என RSN ராயர் வேண்டுகோள்

91 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு

தேர்தல் பிரச்சார சர்ச்சை: கெடா மந்திரி பெசார் சனுசி மற்றும் அம்னோ தொகுதி தலைவர் விரைவில் போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் தேர்தல் களைகட்டியது: காலை 10 மணி நிலவரப்படி 34.26 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களிப்பு

நெகிரி செம்பிலான் தேர்தல்: முன்கூட்டியே வாக்காளர்களுக்கு வீரப்பன் பாராட்டு