தேவையான மாற்றங்களை செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க மலேசியா தவறுமானால் அது சுக்கு நூறாகிவிடும் சாத்தியம் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள உறுப்புக்கட்சிகளும் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு தேவையான மாற்றங்களை செய்து கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று 101 East Al Jazeera விற்கு வழங்கிய சிறப்புப்பேட்டியில் அன்வார் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தேவையான மாற்றங்களை செய்து கொள்வதற்கு ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளனவா? என்று எழுப்பட்ட கேள்விக்கு ஆம் என்று அன்வார் பதில் அளித்துள்ளார்.
தாம் ஒரு சர்வாதிகாரி அல்ல. ஆனால், ஒரு ஜனநாயக நாட்டிற்கு தலைமையேற்றுள்ள பிரதமர். அந்த வகையில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கு தாமும் தயாராகி வருவதாக அன்வார் தமது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
