ஷா ஆலாம், நவம்பர்.12-
மலேசியாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை அம்னோ ஆதரித்தது மூலம் கட்சியின் சுதந்திர போராட்டவாதிகளுக்கு அக்கட்சி துரோகம் இழைத்து விட்டது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
அந்த பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை அம்னோ ஆதரித்தது மூலம் தியாகிகளின் போராட்டத்தினால் கிடைக்கப் பெற்ற சுதந்திர உற்சாகத்தைச் சீர்குலைக்கச் செய்துள்ளது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
தனது சொந்த மண்ணை அடகு வைக்கும் அளவிற்கு அம்னோ சொந்த நலனுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கி விட்டது என்று துன் மகாதீர் சாடினார்.








