Jan 20, 2026
Thisaigal NewsYouTube
டிஏபி, அம்னோவிற்கு முழு உதவியினை வழங்கும்
அரசியல்

டிஏபி, அம்னோவிற்கு முழு உதவியினை வழங்கும்

Share:

விரைவில் நடைபெறவிருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தலில், அம்னோவிற்கு தமது கட்சி முழு ஆதரவையும், உதவியையும் வழங்கும் என்று டிஏபியின் துணைப் பொதுச் செயலாளர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

கடந்த வார இறுதியில் அம்னோ பொதுச் சபையில் தாம் ஆற்றிய உரை குறித்து கருத்து தெரிவித்த ஙா கோர் மிங், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களின் கடந்த காலத்தைக் கொண்டு வராமல் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் தங்கள் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவிக் கொண்டே தான் இருக்கும் என்றும் நடப்பு நிலைமையைப் புரிந்து கொண்டு நாட்டின் ஒற்றுமை கருதி அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஙா கோர் மிங் கூறினார்.

Related News