கோலாலம்பூர், ஆகஸ்ட் 24-
வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடுவதற்கு அந்த தொகுதி, அம்னோ மகளிருக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று அம்னோ மகளிர் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினரும், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட்ஜாஹிட் ஹமிடியின் மகளுமான நூருல்ஹிதாயா அஹ்மத் ஜாஹித் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்னோ மாநாட்டில் நூருல்ஹிதாயா விடுத்துள்ள இந்த கோரிக்கை குறித்து கருத்துரைத்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே, கட்சியின் தேசியத் தலைவரின் மகள், விடுத்துள்ள கோரிக்கைக்காக அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை என்றார்.
இந்த இடைத்தேர்தலில் அம்னோவின் வெற்றி முக்கியமே தவிர அங்கு யார் போட்டியிட வேண்டும் என்று அம்னோ தலைவர் மகள் விடுத்துள்ள கோரிக்கை முக்கியம் அல்ல என்று டாக்டர் அக்மல் சலே எதிர்வினையாற்றியுள்ளார்








