Aug 7, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தலில் அம்னோவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை: ஹாடி அவாங்
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தலில் அம்னோவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை: ஹாடி அவாங்

Share:

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள, பாஸ் கட்சியானது அம்னோவுடன் கைகோர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கட்சியின் 'நிஸ்மிலான் கீத்தோ ஜாகோ' தேர்தல் பிரசார தொடக்க விழா மற்றும் நிதி திரட்டும் விருந்தில் கலந்து கொண்ட அவர், தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் மலாய்-முஸ்லிம் தலைமையிலான அரசை அமைப்பதே இந்த கூட்டணியின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொகுதிப் பங்கீடு குறித்து விளக்கமளித்த அவர், கடந்த 2023 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் அம்னோ வென்ற 14 தொகுதிகளை அக்கட்சி தக்கவைத்துக் கொள்ளும் என்றும் பாஸ் தாம் வென்ற 3 தொகுதிகளை தக்கவைத்துக் கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், மீதமுள்ள தொகுதிகள் இரு கட்சிகளுக்கிடையே பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணி வெற்றி பெற்றால் மந்திரி பெசார் பதவியில் PAS-க்கு விருப்பமில்லை என்பதையும் ஹாடி உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார்  வரவேற்பு

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார் வரவேற்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்