Aug 28, 2026
Thisaigal NewsYouTube
ஓன் ஹஃபீஸ் காஃஸி மீண்டும் ஜோகூர் மந்திரி பெசாராக பதவியேற்பு
அரசியல்

ஓன் ஹஃபீஸ் காஃஸி மீண்டும் ஜோகூர் மந்திரி பெசாராக பதவியேற்பு

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.12-

மாச்சாப் சட்டமன்ற உறுப்பினரும், ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவருமான டத்தோ ஓன் ஹஃபீஸ் காஃஸி, இன்று ஞாயிற்றுக்கிழமை, Istana Bukit Serene அரண்மனையில் மாநில மந்திரி பெசாராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார்.

பிற்பகல் 3.41 மணிக்கு அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்து, மாலை 4.50 மணிக்கு அவரது வாகனமானது வெளியேறியது.

முன்னதாக, ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பில், Istana Bukit Serene அரண்மனையின், Mahkota நுழைவாயிலில் மட்டுமே செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படும் என்று அரண்மனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், Bukit Serene அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் கூட்டம் அலை மோதியது.

56 மாநில சட்டமன்ற இடங்களில் 48 இடங்களைக் கைப்பற்றி, 16வது ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ஜோகூர் மந்திரி பெசாராக டத்தோ ஓன் ஹஃபீஸ் காஸி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News