Jul 12, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் பின்னடைவைச் சந்தித்தால் நெகிரி செம்பிலானில் வெற்றியை நோக்கி பக்காத்தான்: அந்தோணி லோக்
அரசியல்

ஜோகூரில் பின்னடைவைச் சந்தித்தால் நெகிரி செம்பிலானில் வெற்றியை நோக்கி பக்காத்தான்: அந்தோணி லோக்

Share:

ஜெலெபு, ஜூலை.12-

நேற்று நடைபெற்று முடிந்த 16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெற்றதை ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதியாக ஏற்று, வாக்காளர்களின் தீர்ப்பை மதிப்பதாக பக்காத்தான் ஹராப்பான் துணைத் தலைவரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

கடுமையான போட்டி இருக்கும் என முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தாலும், 56 தொகுதிகளில் 8 இடங்களை பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றியதாகவும், கடந்த தேர்தலில் ஜசெக வென்ற 10 தொகுதிகளில் 6 தொகுதிகளை மீண்டும் தக்க வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், நகர்ப்புறங்களில் ஜசெகவுக்கு வலுவான ஆதரவு தொடர்வதுடன், வென்ற ஆறு தொகுதிகளிலும் 50 சதவீதத்துக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாகவும் கம்போங் சென்னாவில் இன்று நடைபெற்ற கம்போங் அங்காட் மடானி திட்டத்தில் பங்கேற்ற அந்தோணி லோக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜோகூர் தேர்தல் முடிவை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் அளவுகோலாகக் கருதக்கூடாது என்றும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான அரசியல் சூழல் மற்றும் பிரச்சினைகள் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு தற்போதுள்ள தொகுதிகளை தக்க வைத்துக் கொள்வதிலும், மக்களின் ஆதரவை மேலும் வலுப்படுத்துவதிலும் பக்காத்தான் ஹராப்பான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் விவரித்துள்ளார்.

Related News

ஓன் ஹஃபீஸ் காஃஸி மீண்டும் ஜோகூர் மந்திரி பெசாராக பதவியேற்பு

ஓன் ஹஃபீஸ் காஃஸி மீண்டும் ஜோகூர் மந்திரி பெசாராக பதவியேற்பு

ஜோகூரில் பாரிசான் வெற்றி பெற்றால் பதவி விலகுவேன் எனக் கூறவில்லை – அமைச்சர் ஙா கோர் மிங் விளக்கம்

ஜோகூரில் பாரிசான் வெற்றி பெற்றால் பதவி விலகுவேன் எனக் கூறவில்லை – அமைச்சர் ஙா கோர் மிங் விளக்கம்

ஜோகூர் தேர்தலில் பெரிகாத்தானுக்கு பெரும் பின்னடைவு: கையில் இருந்த 3 தொகுதிகளும் பறிபோனது

ஜோகூர் தேர்தலில் பெரிகாத்தானுக்கு பெரும் பின்னடைவு: கையில் இருந்த 3 தொகுதிகளும் பறிபோனது

ஜோகூரில் பெர்சாமா படு தோல்வி: அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்ததாக ரஃபிஸி உறுதி

ஜோகூரில் பெர்சாமா படு தோல்வி: அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்ததாக ரஃபிஸி உறுதி

பாரிசான் நேஷனலின் மகத்தான வெற்றிக்கு அன்வார் வாழ்த்து: இனி ஜோகூர் மக்களுக்கான சேவையில் ஒன்றிணைவோம் என அழைப்பு

பாரிசான் நேஷனலின் மகத்தான வெற்றிக்கு அன்வார் வாழ்த்து: இனி ஜோகூர் மக்களுக்கான சேவையில் ஒன்றிணைவோம் என அழைப்பு

புத்ரி வங்சா தொகுதியில் 5,744 வாக்குகள் பெரும்பான்மையில்  டாக்டர் மஸ்லீ மாலிக் மகத்தான வெற்றி

புத்ரி வங்சா தொகுதியில் 5,744 வாக்குகள் பெரும்பான்மையில் டாக்டர் மஸ்லீ மாலிக் மகத்தான வெற்றி