Oct 25, 2025
Thisaigal NewsYouTube
நஜீப்பின் மேல்முறையீடு விசாரணை ஒத்திவைப்பு
அரசியல்

நஜீப்பின் மேல்முறையீடு விசாரணை ஒத்திவைப்பு

Share:

டிச.5-

தம்மை வீட்டுக் காவலில் வைப்பதற்கு அனுமதிக்கும் அரச ஆணை மீதான சர்ச்சையில் உயர்நீதிமன்ற முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் செய்து கொண்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு மனு மீதான விசாரணையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது..

இந்த மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதாக நஜீப் செய்து கொண்டுள்ள புதிய விண்ணப்பத்தைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ அஸிஸா நவாவி தெரிவித்தார்.

தம்மை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் அரச ஆணையை செயல்படுத்தக்கோரி நஜீப் செய்து கொண்ட வழக்கு மனுவை கடந்த ஜுலை மாதம் 3 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அம்முடிவை எதிர்த்து அந்த முன்னாள் பிரதமர் அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்..

தம்முடைய 6 ஆண்டு கால சிறைத் தண்டனை காலத்தை விட்டுக் காவலில் கழிப்பதற்கு முன்னாள் மாமன்னர் அனுமதி வழங்கி இருப்பதால், அந்த அரச ஆணையை ஏற்று செயல்படுத்த அரசாங்கத்தற்கு உத்தரவிடுமாறு தமது மேல்முறையீட்டு மனுவில் நஜீப் விண்ணப்பம் செய்துள்ளார்.

Related News