Oct 29, 2025
Thisaigal NewsYouTube
பெரிக்கத்தான் நெசனலிடமிருந்து எந்தவொரு எதிர்ப்பும் வரவில்லை
அரசியல்

பெரிக்கத்தான் நெசனலிடமிருந்து எந்தவொரு எதிர்ப்பும் வரவில்லை

Share:

ஜூலை 28-

பாரிசான் கட்சியின் ஆட்சியின் போது, சூதாட்டம் மற்றும் மதுபான விற்பனை வழி வருகின்ற வருமானத்தை தாய்மொழி பள்ளிகள் மற்றும் சீனப் கோவில்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தியபோது, பெரிக்கத்தான் நெசனலிடமிருந்து எந்தவொரு எதிர்ப்பும் வரவில்லை என அம்னோ கட்சியின் துணைத் தலைவர் Mohamed Khaled Nordin கூறினார்.

பாரிசான் கட்சியின் ஆட்சியின்போது மதுபானம் மற்றும் சூதாட்டத்தின் வழி வருகின்ற வருமானத்தை தாய்மொழிப் பள்ளிகளில் பயன்படுத்தும் நடைமுறை இருந்ததாகவும அந்தப் பணத்தை பள்ளிவாசலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினால் மட்டுமே தவறு என சுட்டிக் காட்டினார்.

அதே சமயம் பெரிக்கத்தான் நெசனலின் ஆட்சியின்போது இந்த நடைமுறை தவறென்றால் அவர்கள் ஏன் அப்பொழுது அதை தடுக்க முட்படவில்லை என Mohamed Khaled Nordin கேள்வி எழுப்பினார்.

Related News