Oct 25, 2025
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி ஒங் மலேசியப் பிரதமர் சந்தித்தார்
அரசியல்

ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி ஒங் மலேசியப் பிரதமர் சந்தித்தார்

Share:

கோலாலம்பூர், டிச.4-

இன்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி ஒங் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம்மைச் சந்தித்தார். தற்போது மலேசியாவில் இருக்கும் பென்னி ஒங், 6-வது ஆண்டு மலேசிய-ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.


நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அன்வரும் பென்னி ஒங் பொருளாதாரம், பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, உயர்கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்தனர். 2025ஆம் ஆண்டில் மலேசியா-ஆஸ்திரேலியா இடையேயான தூதுவரவு உறவு 70 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறிப்பாக முக்கியமானதாக அமைகிறது..

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், ஆஸ்திரேலியா அடுத்த ஆண்டு ASEAN கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் மலேசியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தது.

Related News