டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியின் ஆண்டு பேராளர் மாநாடு இன்று நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கி, 25 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு ஷா ஆலாம், ஐடியல் கொன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது.
பெர்சத்து கட்சியை முதுகெலும்பாக கொண்டுள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை வலுப்படுத்துவது, புதிய செயல் திட்டத்தை வகுப்பது, நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நிலைநிறுத்திக்கொள்வது ஆகிய மூன்று விவகாரங்கள் பேராளர் மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்ற அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பெர்சத்து கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தங்கள் ஆதரவை நல்கியிருப்பது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.








