புத்ராஜெயா, நவம்பர்.03-
இம்மாதம் இறுதியில் நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.
சபா மாநில பாரிசான் நேஷனல் தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டப் பின்னர் வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக பொருத்தமான நேரத்தில் பாரிசான் நேஷனல் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று ஸம்ரி கூறினார்.








