Oct 15, 2026
Thisaigal NewsYouTube

நஜீப் விவகாரம்: நேர்மையாக நடத்தப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜீப் விவகாரம்: நேர்மையாக நடத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜன. 6-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் விவகாரம், நீதி மற்றும் சட்ட நடைமுறைகள் நேர்மையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டார்.

பாரிசான் நேஷனல் கட்சி, ஒரு பாரம்பரியமிக்கது. நஜீப் உட்பட, கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் எந்தப் பிரச்னையை எதிர்கொண்டாலும் அவர்களின் சேவைகள், தியாகங்கள் மற்றும் சிறந்த பங்களிப்பு ஆகியவற்றுக்கான மாண்புகளும், மரியாதைகளும் அவர்கள் ஒரு போதும் இழந்து விடவில்லை என்பதை தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நஜீப் விவகாரத்தில் அவரின் பின்னால் அம்னோ உறுதியாகவும், அவரின் விவகாரம் சட்டமுறைகளுக்கு ஏற்ப நிறைவேற்றப்பட வேண்டும் என்பதிலும் தெளிவாக உள்ளது என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →