கோலாலம்பூர், நவம்பர்.27-
தம்முடைய அரசியல் மூத்த செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பதவி விலகியிருப்பது, அரசாங்கத்தின் உயரிய நேர்மை, நிலைநிறுத்தப்பட்டிருப்பதை நிரூபிக்கிறது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஒருவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போது, விசாரணைக்கு வழிவிடும் வகையில் அவர் பதவி விலகுவது நாட்டின் அரசு நிர்வாகத்தில் முன்னெப்போதும் நடந்திராத ஒன்றாகும் என்று பிரதமர் வர்ணித்தார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு வழிவிடும் வகையில் ஷாம்சுல் பதவி விலகியிருப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








