Sep 27, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா தேர்தலில் நீதியே பிகேஆர் கட்சியின் அடிப்படை தாரக மந்திரம் - டாக்டர் வான் அஸிஸா திட்டவட்டம்
அரசியல்

மலாக்கா தேர்தலில் நீதியே பிகேஆர் கட்சியின் அடிப்படை தாரக மந்திரம் - டாக்டர் வான் அஸிஸா திட்டவட்டம்

Share:

மலாக்கா மாநிலத் தேர்தலில், நீதியை நிலைநாட்டும் கொள்கையே பிகேஆர் கட்சியின் அடிப்படை போராட்டமாக இருக்குமென என அக்கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமே கட்சியின் நோக்கம் அல்ல என்றும், ஒவ்வொரு மலேசியருக்கும் உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வதே தங்களது இலக்கு என்றும் மலாக்காவில் இன்று பிகேஆர் மகளிர் பிரிவின் தேர்தல் பணிக் குழுவைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கட்சியில் இருந்து சிலர் விலகினாலும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உறுப்பினர்கள் நீதிக் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என டாக்டர் வான் அஸிஸா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாற்றம் என்பது எளிதில் ஏற்படாது எனக் குறிப்பிட்ட அவர், அதற்கு தொடர்ந்து முயற்சியும் அர்ப்பணிப்பும் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

மாநிலத் தேர்தலில் குறைந்தது 30 சதவீத வேட்பாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Related News