Dec 12, 2025
Thisaigal NewsYouTube
கினாபாத்தாங்கான் நாடாளுமன்றம், லாமாக் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் யார்? - சபா பிஎன் பேச்சுவார்த்தை
அரசியல்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றம், லாமாக் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் யார்? - சபா பிஎன் பேச்சுவார்த்தை

Share:

லூமூட், டிசம்பர்.12-

முன்னாள் சபா அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடினின் மறைவையடுத்து, காலியாக உள்ள அவரது கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதி மற்றும், லாமாக் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாரிசான் சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது.

இந்த இரு தொகுதிகளையும் மீண்டும் தக்க வைப்பது குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், சபா பாரிசானின் உயர் மட்டக் குழு ஈடுபட்டிருப்பதாக அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் சபா பிஎன் தன்னாட்சி உரிமை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஸம்ரி, வேட்பாளர் முடிவு செய்யப்பட்டவுடன் பிஎன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியிடம் அது குறித்துத் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தேர்தல் ஆணையம், கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ஆஆள் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க, வரும் டிசம்பர் 16-ஆம் தேதி, சிறப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

Related News