Oct 23, 2025
Thisaigal NewsYouTube
அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை வென்று பெரிய பங்களிப்பை வழங்க வேண்டும்
அரசியல்

அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை வென்று பெரிய பங்களிப்பை வழங்க வேண்டும்

Share:

தேசிய முன்னணியின் தலைவர்களும் அதன் உறுப்பினர்களும் கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார் அதன் தலைவர் Zahid Hamidi. கட்சியின் கௌரவமும் நேர்மையும் மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கட்சி, ஒற்றுமை அரசாங்கம் ஆகியவை குறித்த பிரச்சினைகளை வெளிப்படையாக ஊடகங்கள் மூலம் வெளியிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய முன்னணி, 16வது நாடாளுமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை வென்று பெரிய பங்களிப்பை வழங்க விரும்புவதாக Zahid Hamidi தெரிவித்தார். இதற்காக கட்சிக்குள்ளேயே ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றும், மக்களை தொடர்ந்து சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டு தீர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் மீண்டும் தேசிய முன்னணி மீது மிகவும் ஆர்வமாகவும் எதிர்ப்பார்ப்பும் கொண்டுள்ளனர். ஆனால் மக்களின் ஆதரவைப் பெற்றுவிட்டதால் நாம் மிகவும் அலட்சியமாக இருக்கக்கூடாது, மக்களை தொடர்ந்து சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டு தீர்க்க வேண்டும். மக்களை நேரடியாகச் சந்திப்பதுதான் தேசிய முன்னணி தனது இழந்த இடங்களை மீண்டும் கைப்பற்ற சிறந்த வழி என்று அவர் குறிப்பிட்டார்.

Related News