இன்று நடைபெறும் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி, 56 இடங்களில் குறைந்த பட்சம் 40 இடங்களை வெல்லும் என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். புக்கிட் அந்தரா பங்சா, லம்பா ஜெயா, சுங்கை துவா, தாமன் மேடன், போர்ட் கிளாங் ஆகிய கடுமையான தொகுதிகளையும் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் டிங்கில், பத்தாங் காலி ஆகிய தொகுதிகளும் அடங்கும்.வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெளிவாக முடிவு செய்து விட்டார்கள். சிலாங்கூர் மாநிலத்தை நான்காவது தவணையாக தற்காத்துக்கொள்வது உறுதி என்று அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


