Sep 23, 2026
Thisaigal NewsYouTube
மாநில அளவில் பிஎன்-பிஎச் கூட்டணி ஒப்பந்தம் இல்லை: அகமத் மஸ்லான் பரபரப்புத் தகவல்
அரசியல்

மாநில அளவில் பிஎன்-பிஎச் கூட்டணி ஒப்பந்தம் இல்லை: அகமத் மஸ்லான் பரபரப்புத் தகவல்

Share:

பாரிசான் நேஷனல் கூட்டணி, மாநில அரசாங்கங்கள் அளவில் பக்காத்தான் ஹராப்பானுடன் எந்தவோர் அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தையும் செய்து கொள்ளவில்லை என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அகமட் மஸ்லான் கூறியுள்ளார். இதன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய அரசியல் உத்திகளைப் பயன்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பேரா, மஞ்சோங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஜொகூரில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டோம். நெகிரி செம்பிலானிலும் ஒற்றுமை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் இல்லாததால், நாங்கள் பெரிகாத்தான் நேஷனலுடன் இணைந்து செயல்படுகிறோம். இதே போல சரவாக் மற்றும் மலாக்காவிலும் பக்காத்தான் ஹராப்பானுடன் கூட்டணியுடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை" என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

இருப்பினும், பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் மத்திய அரசாங்க அளவில் மட்டுமே செல்லுபடியாகும் என்றும், தற்போதைய நாடாளுமன்றப் பதவிக் காலம் முடியும் வரை மத்தியிலுள்ள ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாரிசான் நேஷனல் தனது முழு ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் பொதுப்பணித்துறை துணை அமைச்சரமான அகமட் மஸ்லான் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் நெருக்கடி: துவாங்கு நசாருடின் வெளியேறினார்... சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்தில் பதற்றம் தணிந்தது

நெகிரி செம்பிலான் நெருக்கடி: துவாங்கு நசாருடின் வெளியேறினார்... சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்தில் பதற்றம் தணிந்தது

நெகிரி செம்பிலான் அரசுக்கு அதிகாரம் இல்லை... மாநில அரசு செயலாளரை இடைநீக்கம் செய்ய முடியாது என ஏஜிசி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் அரசுக்கு அதிகாரம் இல்லை... மாநில அரசு செயலாளரை இடைநீக்கம் செய்ய முடியாது என ஏஜிசி அறிவிப்பு

மலாக்கா தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்: மொத்தம் 3,150 போலீசார் குவிப்பு

மலாக்கா தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்: மொத்தம் 3,150 போலீசார் குவிப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்