May 31, 2026
Thisaigal NewsYouTube
தொழிற்சாலை சத்தத்தால் காது கேட்கும் திறன் இழப்பு அதிகரிக்கிறது - சுகாதார அமைச்சர் தகவல்
அரசியல்

தொழிற்சாலை சத்தத்தால் காது கேட்கும் திறன் இழப்பு அதிகரிக்கிறது - சுகாதார அமைச்சர் தகவல்

Share:

மலேசியாவில் பணி தொடர்பான நோய்களில் அதிகளவில் பதிவாவது தொழிற்சாலை சத்தத்தால் ஏற்படும் காது கேட்கும் திறன் இழப்பு என சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமது தெரிவித்துள்ளார்.

தொழிலிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை வழங்கிய தரவுகளை மேற்கோள் காட்டிய அவர், தொழிற்சாலைகளில் அதிக சத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் நோய் கடுமையான நிலையில் தான் மருத்துவமனைகளுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தேசிய காது-மூக்கு-தொண்டை பதிவேட்டின் படி, 2025 ஆம் ஆண்டு வரை சுமார் 44 ஆயிரம் கேட்கும் திறன் இழப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 86.4 விழுக்காடு அளவில் பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுல்கிப்ளி தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக கேட்கும் திறன் தினம் 2026 நிகழ்ச்சியில் உரையாற்றிய போது சுல்கிப்ளி இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

Related News