Oct 13, 2026
Thisaigal NewsYouTube

டிஏபி கட்சித் தேர்தல் – புதிய தேசியத் தலைவராக கோபிந்த் சிங் டியோ தேர்வு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிஏபி கட்சித் தேர்தல் – புதிய தேசியத் தலைவராக கோபிந்த் சிங் டியோ தேர்வு!

ஷா ஆலாம், மார்ச்.16-

டிஏபி கட்சியின் 2025-2028 ஆம் ஆண்டுக்கான மத்திய உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் இன்று கட்சியின் புதிய தேசியத் தலைவராக கோபிந்த் சிங் டியோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். லிம் குவான் எங் கட்சி ஆலோசகராகவும், Nga Kor Ming தேசிய துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளராக அந்தோணி லோக் நிலை பெற்றுள்ளார். புதிய குழுவில் Chong Chieng Jen, Teo Nie Ching, Ng Suee Lim, Syahredzan Bin Johan, அருள்குமார் ஜம்புநாதன் ஆகியோர் தேசிய துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், Ngeh Koo Ham கட்சியின் பொருளாளராகவும், Yeo Bee Yin கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், கஸ்தூரி ராணி பட்டு சர்வதேச செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Liew Chin Tong வியூகத் திட்ட இயக்குநராகவும், Chan Foong Hin கொள்கை இயக்குநராகவும், Wong Kah Woh தேர்தல் இயக்குநராகவும் பொறுப்பேற்கின்றனர். Teo Kok Seongஉம், Chow Kon Yeow உம் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய செயற்குழுவின் பதவிக்காலம் 2025 முதல் 2028 வரை நீடிக்கும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →