வரும் சட்டமன்றத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி மகத்தான வெற்றி பெறுமானால் மாநிலத்தின் மந்திரி பெசராக டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் நியமனம் செய்யப்படுவார் என்று டி ஏ பி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
அமினுடின் ஹரூண் இரண்டாவது முறையாக நெகிரி செம்பிலான் மாநில அரசுக்கு தலைமையேற்பதை டி ஏ பி முழுமையாக ஆதரிப்பதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு தவணைக்காலம் மாநிலத்திற்கு தலைமையேற்று இருந்த அமினுடின் ஹரூணின் சிறப்பான தலைமைத்தவத்தை கருத்தில் கொண்டு மாநிலத்திற்கு தலைமையேற்க அவருக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


