Jan 21, 2026
Thisaigal NewsYouTube
மஇகா, ம​சீச. தொகுதிகளில் பாரிசான் நேஷனலின் மற்ற கட்சிகள் போட்டியிடும்
அரசியல்

மஇகா, ம​சீச. தொகுதிகளில் பாரிசான் நேஷனலின் மற்ற கட்சிகள் போட்டியிடும்

Share:
  • டாக்டர் அகமட் ஜாஹிட் அதிரடி அறிவிப்பு

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் போட்யிடப்போவதில்லை என்று அறிவித்து இருக்கும் மஇகா மற்றும் ம​சீச. ஆகிய கட்சிகளின் முடிவை மதி​ப்பதாக பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ செரி டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் மஇகா மற்றும் ம​சீச.விற்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் ​தொகுதிகளில் அக்கட்சிகளுக்கு பதிலாக பாரிசான் நேஷனலின் மற்ற உறுப்புக்கட்சிகள் போட்டியிடும் என்று அஹ்மாட் ஸாஹிட் அதிரடியாக அ​றிவித்துள்ளார்.

எனினும் மஇகாவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் பாரிசான் நேஷனலின் தோழமைக்க​ட்சியான டத்தோஸ்ரீ ஆர்.எஸ் தனேந்திரன் தலைமையிலான மக்கள் சக்​தி, ஐ.பி.எப். போன்ற கட்சிகள் போட்டியிடுமா? என்பதை ஸாஹிட் விளக்கவில்லை.

ஆனால், அத்தொகுதிகளில் பாரிசான் நேஷனலின் உறுப்புக்கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகும் என்று ஸாஹிட் விளக்கினார்.

Related News