கோல நேருஸ், அக்டோபர்.18-
விரைவில் நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் லஞ்ச புழக்கத்தைக் கண்டறிவதற்கும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் 40 அதிகாரிகளைக் களம் இறக்கவிருப்பதாக அதன் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
லஞ்ச ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் பொதுமக்களின் புகார்களைப் பெறும் பொருட்டு சபாவில் சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
சபா தேர்தல் நேர்மையாக அதே வேளையில் ஊழலற்ற முறையில் நடைபெறுவதை இந்த சிறப்புக் குழு உறுதிச் செய்யும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.