கோலாலம்பூர், செப்டம்பர்.21-
மலேசிய அரசியலில் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள 11 மாநிலங்களுக்கான தேர்தல்களை அடுத்த 16வது பொதுத் தேர்தலோடு ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என டிஏபி கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் முன்மொழிந்துள்ளார். இதனால், தேர்தல் செலவுகள் வெகுவாகக் குறைக்கப்படுவதுடன், மத்திய, மாநில அரசாங்கங்களின் பதவிக் காலமும் ஒரே சீராக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு ஒரு புதிய பாதையை அமைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும், இந்த யோசனை இன்னும் கூட்டணி கட்சிகளுடன் விவாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.