கெய்ரோ, நவ. 11-
தற்காப்புத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையில் இரு வழி ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வதற்கு மலேசியாவும், எகிப்தும் இன்று உறுதிப்பூண்டுள்ளன.
சைபர் தாக்குதல், கிரிப்டோ நாயண மோசடி மிரட்டல்கள் போன்ற எல்லைத்தாண்டிய குற்றச்செயல்களை கையாளும் வகையில் தகவல்களை பறிமாறிக்கொள்வது மற்றும் கூட்டுப்பயிற்சி முதலியவற்றுக்கு கலந்துரையாடல் வாயிலாக ஒத்துழைப்பு கொள்வதற்கு இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், எகிப்துக்கு மேற்கொண்டுள்ள நான்கு நாள் அதிகாரத்துவப்பயணம் தொடர்பில் வெளியிட்டப்பட்ட ஓர் அறிக்கையில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, எகிப்து அதிபர் அப்டேல் பத்தா எல்.சிசி-யுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்காப்புத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் மலேசியாவிற்கும் எகிப்புதுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








