பேராக்,ஜூலை 28-
அடுத்த பொது தேர்தலின் போது, கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்காக தன்னிடம் மற்றும் பிரதமர் அன்வாரோடு கலந்துபேச தூது அனுப்பிய கட்சியின் பெயரைத் தாம் கூற விருப்பப்படவில்லை என துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.
அடுத்த பொது தேர்தலின் போது கூட்டணி அமைக்க அந்தக் கட்சி தீராத தாகம் கொண்டிருப்பதாகவும் அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என சாயிட் சுட்டிக்காட்டி உள்ளார். இப்போதைய தேவை, நடப்பு ஒற்றுமை அரசாங்கம் மேலும் வலுப்பட வேண்டும் என்பதே. தன்னிடம் தூது அனுப்பிய கட்சி ஏற்கனவே அரசாங்கம் அமைத்திருந்த கட்சி என்பதால் அவர்கள் மீண்டும் ஆட்சி அமைக்க தீராத தாகம் கொண்டிருப்பதாக Bagan Datuk, Sungai Sumun அம்னோ பிரிவின் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.








