தற்போது ஆட்சியில் இருந்தாலும் கட்சியை பலப்படுத்த ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என அமானா கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமாட் சாபு தெரிவித்தார்.
ஏனென்றால், கட்சியின் பலமே தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும், ஆட்சியில் இருக்கும் பதவி அல்ல என்றார் அவர்.
UMNO, தேசிய முன்னணி ஆகியவற்றின் வரலாற்றைச் சுட்டிக் காட்டிய மாட் சாபு, அவை வலுவான கட்சிகளாக இருந்தாலும், 2018, 2022 தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கின்றன. எனவே அரசாங்கத்தில் இருப்பது ஒரு வலுவான கட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
14 வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றிஉந்தாலும், அதற்கடுத்து வந்த இடைத்தேர்தலில் தோல்வியையும் தழுவி இருந்தது.
ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ என்பது வெற்றிக்கு தீர்க்கமானதல்ல, கட்சியின் பலத்திற்கு முக்கியமானது என்பதையே நிலைமை தெளிவாகக் காட்டுகிறது என்றார்.
எனவே, தாங்கள் அரசாங்கமாகி அமைச்சராகும்போதும், துணை அமைச்சர்களாக நியமிக்கப்படும் போதும், ஜி எல் சி யில் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போதும், கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது ஆபத்தை விளைவிக்கும் என மாட் சாபு சொன்னார்.








