Oct 29, 2025
Thisaigal NewsYouTube
சில குடும்பங்கள் இழப்பீட்டைப் பெற மறுக்கின்றனர்
அரசியல்

சில குடும்பங்கள் இழப்பீட்டைப் பெற மறுக்கின்றனர்

Share:

கோலாலம்பூர், நவ.5-


பத்து ஆண்டுகளுக்கு முன்பு 239 பேருடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச். 370 விமானத்தில் தங்கள் உறவினர்களை இழந்தவர்களில் சிலர், இன்னும் அதற்கான இழப்பீட்டை பெற மறுத்து வருகினறனர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், தங்கள் இழப்பீட்டை பெறுவதற்கான காலக்கெடுவும் காலாவதியாகி விட்டது. ஆனால், சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் இழப்பீட்டை வாங்க மறுத்து வருகின்றனர் என்று அந்தோணி லோக் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்கள் இழப்பீட்டை பெறுவதற்கு முன்வந்து, அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பார்களேயானால், அது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடன் பேசுவதற்கு போக்குவரத்து அமைச்சு மத்தியஸ்தராக செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்கள், தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைவார்கள் என்று சில புதிய நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருப்பதாக அமைச்சர் விளக்கினார்.

Related News