ஷா ஆலாம், நவ. 15-
சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ரொக்க உதவித் தொகையாக இரண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்று சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு நிதியுதவி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
முதல் கட்டத் தொகை இவ்வாண்டு டிசம்பர் 30 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தொகை, நோன்புப் பெருநாளை முன்னிட்டு அடுத்தாண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதியும் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநிலத்தின்
2025 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலின் போது மந்திரி பெசார் இதனை தெரிவித்தார்.








