கோலாலம்பூர், பிப்ரவரி.14-
பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின், பாஸ் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங்கை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
ஹாடி அவாங்குடன் தேநீர் அருந்துவது போலான புகைப்படம் ஒன்றை ஹம்ஸா தனது முகநூலில் நேற்று மாலை பதிவிட்டுள்ளார்.
அதில், ருசிலாவில் தேநீர் அருந்துவதாகவும், இறைவன் அனைத்தையும் சிறப்பாகப் திட்டமிடுகிறார் என்றும் ஹம்ஸா குறிப்பிட்டுள்ளார்.
திரங்கானு மாநிலத்தில், கம்போங் ருசிலா, மாராங் என்ற பகுதியில் தான் ஹாடி அவாங்கின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ளது.
இதனிடையே, ஹம்ஸாவுடன் திரங்கானு மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சம்சூரி மொக்தார், பெர்சாத்து கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ரொனால்ட் கியாண்டி, பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் ஆகியோரும் அப்புகைப்படத்தில் காணப்பட்டனர்.
முன்னதாக, பெர்சாத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவானது, ஹம்ஸா உட்பட 16 உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.








