Oct 23, 2025
Thisaigal NewsYouTube
அமைச்சில் கிறிஸ்துவப் பண்டிகையை கொண்டாடுவதா?
அரசியல்

அமைச்சில் கிறிஸ்துவப் பண்டிகையை கொண்டாடுவதா?

Share:

கோலாலம்பூர், டிச. 26-


புத்ராஜெயாவில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டதற்கு பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் முகமட் ஹனிப் ஜமாலுடின் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த பணியாளர்களும் கலந்து கொண்டு இருப்பதை அவர் கேள்வி எழுப்பினார்.

ஓர் அமைச்சில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் தமது ஆட்சேப குறிப்பை, அவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மற்ற சமயத்தவர்களின் கொண்டாட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது சமயத்திற்கு முரணானது என்பதுடன் சட்டவிரோதமானது என்பதை அதன் அமைச்சர் ங்கா கோர் மிங்கிற்கு நன்கு தெரிந்திருந்தும், அந்த நிகழ்வில் முஸ்லிம் பணியாளர்கள் கலந்து கொள்வதற்கு அவர் எவ்வாறு அனுமதித்தார் என்று பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News