பினாங்கு, ஜூன் 06-
பினாங்கு, நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தல் வரும் ஜுலை 6 ஆம் தேதி நடைபெறும் என்ற தேர்தல் ஆணையமான SPR அறிவித்துள்ளது.
இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் ஜுன் 22 ஆம் தேதி நடைபெறும் என்று SPR துணைத் தலைவர் அஸ்மி ஷரோம் தெரிவித்தார்.
சுங்கை பக்காப் இடைத் தேர்தலை முன்னிட்டு ஜுலை 2 ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும். இந்த இடைத் தேர்தலுக்கு 21 லட்சம் வெள்ளி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்று SPR சிறப்புக்கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸ்மி ஷரோம் இதனை தெரிவித்தார்.








