Aug 26, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்திற்கு தொடர்ந்து தலைமையேற்பேன்
அரசியல்

சிலாங்கூர் மாநிலத்திற்கு தொடர்ந்து தலைமையேற்பேன்

Share:

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனல் கூட்டணியும் வெற்றி பெறுமானால் மந்திரி புசார் என்ற முறையில் மாநிலத்திற்கு தொடர்ந்து தலைமையேற்கப் போவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோடி காட்டியுள்ளார். சிலாங்கூர் மாநில மக்களின் நல்வாழ்வை தொடர்ந்து உறுதி செய்வதற்கும், மாநிலம் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி ​பீடு நடைபோடவும் மந்திரி புசார் பதவியை தொடர்ந்து வகிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார். எனினும் சிலாங்கூர் மாநிலத்தை மேம்படுத்துவது என்பது கூட்டுப்பணியே தவிர தமது தனியொரு நபரின் பணி மட்டும் அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News