கோத்தா கினபாலு, நவம்பர்.19-
இம்மாதம் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜிஆர்எஸ் GRS கூட்டணி குறுகிய பெரும்பான்மையில் வெற்றி பெறும் என்று மாநில முதலமைச்சரும் அந்தக் கூட்டணியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தெரிவித்துள்ளார்.
73 சட்டமன்றத் தொகுதிகளில் 37 இடங்களுக்கு மேல் கைப்பற்றி, குறுகிய பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். GRS போட்டியிடுகின்ற மொத்தம் 55 தொகுதிகளில் குறைந்தபட்சம் 40 இடங்களைக் கைப்பற்ற முடியம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Lumadan மற்றும் Klias ஆகிய தொகுதிகளைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.








