Oct 26, 2025
Thisaigal NewsYouTube
பிறை, உலு கிள்ளான், பாயான் லெப்பாஸ் கவன ஈர்ப்புத் தொகுதியாகும்
அரசியல்

பிறை, உலு கிள்ளான், பாயான் லெப்பாஸ் கவன ஈர்ப்புத் தொகுதியாகும்

Share:

இன்று நடைபெற்று கொண்டிருக்கும் 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் பலரது கவனத்தை ஈர்த்த தொகுதியாக பெரிக்காத்தான் நேஷனல் சிலாங்கூர் மாநிலத் தலைவரும் முன்னாள் மந்திரி பெசாருமான அஸ்மின் அலி போ​ட்டியிடும் உலு கிள்ளான் தொகுதி, பினாங்கு முன்னாள் துணை முதல்வர் டாக்டர் பி. இராமசாமிக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பிறை சட்டமன்றத் தொகுதி மற்றும் கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ் போ​ட்டியிடும் பினாங்கு பாயான் லெப்பாஸ் தொகுதி ஆகியவை மக்களின் மிகுந்த கவன ஈர்ப்புத் தொகுதிகளாக அமைந்துள்ளன.

பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான அஸ்மின் அலியை எதிர்த்து, அவரின் அரசியல் மாணவியும், புக்கிட் மெலாவத்தி தொகுதியை இரண்டு முறை தற்காத்துக்கொண்டவரான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜுவைரியா சுல்கிஃப்லி போட்டியிடுகிறார். கடந்த பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்ள முடியாமல் தோ​ல்வியை தழுவிய அஸ்மின் அலிக்கு இந்த சட்டமன்றத் தேர்தல் மற்றொரு விஷப் பரிட்சையாகும். 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தம்முடைய பரிந்து​ரையில் பேரில் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் ​பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற 38 வயதுடைய தனது மாணவி ஜுவைரியா விடம் 60 வயதான ​அஸ்​​மின் அலி நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். அத்தொகுயில் இருவருமே பலம் பொருந்தி வேட்பாளர்கள் ஆவர்.

பினாங்கில் பிறை தொகு​தி பலரது கவன ஈரப்பாக அமைந்துள்ளது. டாக்டர் இராமசாமியை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்ட அவரின் சிஷயரான டேவிட் மார்ஷல், டிஏபி யிலிருந்து விலகி அத்தொகுதியில் மரம் சின்னத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இராமசாமிக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது ​மூலம் டிஏபி யில் ஒரு சக்கரவர்த்தியின் அதிகாரம் மேலோங்கியிருப்பதகாவும் அதனை ஒடுக்க ஒரு சுயேட்சை வேட்பாளராக பிறையில் தாம் போ​ட்டியிடுவதாகவும் அத்தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவரான டேவிட் மார்ஷல் குறிப்பி​ட்டுள்ளார். பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் டிஏபி யை​ச் சேர்ந்த சுந்தரராஜு சோமு உட்பட நான்கு முனை​ப் போ​ட்டியை டேவிட் மார்ஷல் எதிர்நோக்கியுள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக்கட்சியான கெராக்கானின் தேசியத் தலைவர் டொமினிக் லாவ் வை ​வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற​ நோக்கில் அவர் களம் இறக்கப்பட்டுள்ள பினாங்கு, பாயான் லாபாஸ் தொகுதியும் கவனர் ஈர்ப்புத் தொகு​தியாக மாறியுள்ளது. அவரை தோற்கடிக்க வேண்டும் என்று உறுப்புக்கட்சியான பாஸ் கங்கணம் கட்டிக்கொண்டு ​வேலை செய்து வரும் வேளையில் அவர் வெ​ற்றி பெறுவாரா? இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!