Aug 12, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் நிதி மசோதா: நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படலாம் - எம். குலசேகரன்
அரசியல்

அரசியல் நிதி மசோதா: நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படலாம் - எம். குலசேகரன்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

மலேசியாவில் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியல் நிதி மசோதாவின் கீழ், அரசியல் கட்சிகள் தங்களின் நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவதைக் கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சட்ட சீர்திருத்தத்துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் உரையாற்றிய குலசேகரன், இந்த மசோதாவில் இடம் பெறக்கூடிய இதர முக்கிய பரிந்துரைகளையும் பட்டியலிட்டார்.

அரசியல் கட்சிகளுக்கான பொது நிதி ஒதுக்கீடு, அரசியல் நன்கொடைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல் மற்றும் நன்கொடை வழங்கத் தகுதியுள்ளவர்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியவை இந்த சட்ட மசோதாவில் முக்கிய அம்சமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மசோதாவை உருவாக்குவதற்காக அரசாங்கம், வணிக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் 20-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது.

இதில் 12 கூட்டங்கள் மாநில அளவிலானவை ஆகும். இக்கூட்டங்களில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் என மொத்தம் 1,544 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கலந்தாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த அரசியல் நிதி மசோதாவின் அடிப்படை விதிகளாக மாற்றப்படும் என்று துணை அமைச்சர் குலசேகரன் மேலும் விளக்கினார்.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது