Aug 13, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் தீவிர பிரச்சாரம்
அரசியல்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் தீவிர பிரச்சாரம்

Share:

சனிக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு, பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில் பிரதமர் டத்தோ' ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

ஜெலுபுவில் உள்ள சென்னா தொகுதியில் மதிய தேநீர் விருந்துடன் தனது பயணத்தைத் தொடங்கவுள்ள அவர், தொடர்ந்து பரோயில் உள்ள இஸ்லாமிய தவாகா மையத்தில் நடைபெறும் தெமு அன்வார் நிகழ்ச்சியிலும், கிளானா ரிசார்டில் இந்தியச் சமூகம் ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார்.

இரவு 9 மணிக்கு பெதாரியா வர்த்தக மையத்திலும், அதனைத் தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு நீலாய் தேச செம்பாக்கா இரவு சந்தை பகுதியிலும் நடைபெறவுள்ள 'கெக்கல் ஹரப்பான் நெகிரி செம்பிலான்' இறுதி கட்டப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்குகிறார். இந்நிகழ்ச்சிகளில் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுட்தின் ஹாருன், ஜசீகா தேசியச் செயலாளர் அந்தனி லோக் மற்றும் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்