ஒற்றுமை அரசாங்கத்தின் வாயிலாக நாட்டில் கடந்த எட்டு மாத காலமாக ஒரு நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு தார்மீக ஆதரவை நல்கி வரும் அம்னோவிற்கும், அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி க்கும் தமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் நன்றிக் கடன் பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் வழங்கிய வலுவான ஆதரவினால் ஒற்றுமை அரசாங்கம் நிறுவப்படுவதற்கான முன்னெடுப்புகள் சாத்தியமாகியது என்று அன்வார் பெருமிதம் தெரிவித்தார்.
ஜாஹிட் தலைமையிலான அம்னோ தந்த ஆதரவினால் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க முடிந்தது என்றும் எதற்கும் பிடிகொடுக்காமல் இருந்த பெரிக்காத்தான் நேஷனலை தோற்கடிக்க முடிந்தது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
நேற்று இரவு கோலாலம்பூர், தாமான் கேரமாட் டில் பத்தாவது பிரதமருடன் உலு கிள்ளான் மக்கள் எனும் நிகழ்வில் உரையாற்றுகையில் அன்வார் இதனை தெரிவித்தார்.
பக்காத்தாான் ஹராப்பான், அம்னோவுடன் ஒன்றிணைந்த போதிலும் பிகேஆர் தலைவர்கள், இன்னமும் டிஏபி யுடன் இணைத்து முத்திரை குத்தப்பட்டு வருகிறார்கள். இது தீய நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் விஷமப் பிரச்சாரமாகும் என்பதையும் அன்வார் தமது உரையில் விளக்கினார்.

அரசியல்
அம்னோவிற்கும், ஜாஹிட்டிற்கும் பக்காத்தான் ஹராப்பான் நன்றி கடன்பட்டுள்ளது – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறுகிறார்
Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


