Oct 23, 2025
Thisaigal NewsYouTube
நீடித்த செழிப்பிற்கு வியூகத் திட்டங்கள் அமல்
அரசியல்

நீடித்த செழிப்பிற்கு வியூகத் திட்டங்கள் அமல்

Share:

கோலாலம்பூர்,டிச. 23-


மக்களுக்கும் நாட்டிற்கும் நீடித்த செழிப்பைக் கொண்டுவருவதற்காக 2024 ஆம் ஆண்டு முழுவதும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தமது தலைமையிலான மடானி அரசாங்கம் பல்வேறு வியூகத் திட்டங்களை செயல் படுத்தியுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மேம்படுத்தவும், செழிப்பைக்கொண்டு வரவும் 2024 ஆம் ஆண்டின் சிறப்பு அம்சங்கள் என்ற தலைப்பில் இன்று தனது முகநூலில் வெளியிட்ட பதிவில், நிதி அமைச்சரான டத்தோ ஸ்ரீ அன்வார், பல தேசியத் திட்டடங்களுக்கான முன்முயற்சிகள் மற்றும் சாதனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

அந்த சாதனைகளில் ஒன்று டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது ஆகும். இது கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம வரை 254.7 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள டிஜிட்டல் முதலீடுகளைக் கொண்டதாகும் என்பதுடன் ஒரு லட்சத்து 59 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வல்லதாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவில் முதலீடு செய்த பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் Microsoft, NVIDIA, AWS, Google மற்றும் YTL ஆகியவை அடங்கும். இதில் Microsoft 10.5 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News