Sep 23, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த அதிரடி: மலாக்கா தேர்தலிலும் நீடிக்கும் பாரிசான் - பெரிக்காத்தான் மகா கூட்டணி! ஜாஹிட் ஹமிடி அதிரடி அறிவிப்பு
அரசியல்

அடுத்த அதிரடி: மலாக்கா தேர்தலிலும் நீடிக்கும் பாரிசான் - பெரிக்காத்தான் மகா கூட்டணி! ஜாஹிட் ஹமிடி அதிரடி அறிவிப்பு

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.01-

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அடைந்த அசுர வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி அடுத்ததாக நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலிலும் தங்குதடையின்றித் தொடரும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமத் ஜாஹிட் ஹமிடி இன்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலானில் மொத்தம் உள்ள 36 இடங்களில் 25 இடங்களைக் அள்ளியெடுத்து, மூன்றில் இரண்டு பங்கு இமாலயப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த குதூகலத்தில் இருக்கும் இக்கூட்டணிக்கு, இந்த அறிவிப்பு மேலும் புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது. சிரம்பானில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது இம்முடிவை வெளியிட்ட ஜாஹிட் ஹமிடி, நாட்டின் அரசியல் களம் மிகவும் சுறுசுறுப்பானது என்றும், மலேசிய அரசியலின் முதிர்ச்சிக்கு இத்தகையக் கூட்டணிகள் மிக அவசியமானவை என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு இறுதிக்குள் மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், அங்கு முன்கூட்டியே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நெகிரி செம்பிலானில் பாக்காத்தான் ஹரப்பானின் பலத்த கோட்டைகளைத் தகர்த்தெறிந்த அதே உத்வேகத்துடன், மலாக்காவிலும் களம் கண்டு முழுமையான வெற்றியைத் தட்டிப் பறிக்கப் போவதாக அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் தொண்டர்களிடையே முழக்கமிட்டார்.

Related News

நெகிரி செம்பிலான் நெருக்கடி: துவாங்கு நசாருடின் வெளியேறினார்... சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்தில் பதற்றம் தணிந்தது

நெகிரி செம்பிலான் நெருக்கடி: துவாங்கு நசாருடின் வெளியேறினார்... சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்தில் பதற்றம் தணிந்தது

நெகிரி செம்பிலான் அரசுக்கு அதிகாரம் இல்லை... மாநில அரசு செயலாளரை இடைநீக்கம் செய்ய முடியாது என ஏஜிசி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் அரசுக்கு அதிகாரம் இல்லை... மாநில அரசு செயலாளரை இடைநீக்கம் செய்ய முடியாது என ஏஜிசி அறிவிப்பு

மலாக்கா தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்: மொத்தம் 3,150 போலீசார் குவிப்பு

மலாக்கா தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்: மொத்தம் 3,150 போலீசார் குவிப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்