Oct 5, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரம்: துவாங்கு முஹ்ரிஸை நீக்கிய முடிவில் ஆட்சியாளர்கள் குழு உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரம்: துவாங்கு முஹ்ரிஸை நீக்கிய முடிவில் ஆட்சியாளர்கள் குழு உறுதி

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் தொடர்ந்து பதவியில் இருப்பதாக டிகேயு எனப்படும் டேவான் கெஅடிலான் டான் உண்டாங் மன்றம் அறிவித்ததை, ஜோஹோல் (Johol)உண்டாங் உள்ளிட்ட குழுவினர் நிராகரித்துள்ளனர்.

அவர்கள் நேற்று வெளியிட்ட 11 பக்க அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டிகேயு செயலாளர் ராஜா நோரஸ்லி ராஜா நோர்டின் வெளியிட்ட 17 பக்க அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறினர். மேலும், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நெகிரி செம்பிலான் அரசமைப்புச் சட்டத்தின் 10 மற்றும் 29ஆவது பிரிவுகளின் அடிப்படையில் துவாங்கு முஹ்ரிஸை யாங் டி பெர்துவான் பெசார் பதவியிலிருந்து நீக்கியதாகவும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

அத்துடன், கடந்த மார்ச் 5ஆம் தேதி துவாங்கு முஹ்ரிஸிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், எனவே அவருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற டிகேயுவின் வாதம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, துவாங்கு முஹ்ரிஸ் தொடர்ந்து சட்டப்பூர்வமான யாங் டி பெர்துவான் பெசாராக இருப்பதாக டிகேயு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சை சிரம்பான் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தல்: மெம்பான், சுங்கை ஊடாங் தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற பெர்சாத்து உறுதி

மலாக்கா தேர்தல்: மெம்பான், சுங்கை ஊடாங் தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற பெர்சாத்து உறுதி

மலாக்கா தேர்தலில் எதிரணிக் கட்சியுடன் கூட்டணியமைக்கும் பாரிசான்: பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக ஸாஹிட் தகவல்

மலாக்கா தேர்தலில் எதிரணிக் கட்சியுடன் கூட்டணியமைக்கும் பாரிசான்: பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக ஸாஹிட் தகவல்

மலாக்கா தேர்தலில் பாரிசான் சின்னத்தை பாஸ் பயன்படுத்த தடையில்லை - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

மலாக்கா தேர்தலில் பாரிசான் சின்னத்தை பாஸ் பயன்படுத்த தடையில்லை - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தல்: அக்டோபர் 31-ல் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு

மலாக்கா மாநிலத் தேர்தல்: அக்டோபர் 31-ல் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஓரிரு வாரங்களில் அறிவிக்கிறது பக்காத்தான் ஹராப்பான்

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஓரிரு வாரங்களில் அறிவிக்கிறது பக்காத்தான் ஹராப்பான்

நெகிரி செம்பிலானில் ஆட்சிக் குழு இல்லாமல் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் - அருள் குமார் தகவல்

நெகிரி செம்பிலானில் ஆட்சிக் குழு இல்லாமல் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் - அருள் குமார் தகவல்