Oct 24, 2025
Thisaigal NewsYouTube
தேர்தல் கோட்பாட்டை ​மீறியுள்ளார் துணைப்பிரதமர் ஜாஹித் பெர்சிஹ் குற்றசாட்டு
அரசியல்

தேர்தல் கோட்பாட்டை ​மீறியுள்ளார் துணைப்பிரதமர் ஜாஹித் பெர்சிஹ் குற்றசாட்டு

Share:

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் திரெங்கானு மாநில இளையோர்களுக்கு மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டை அறிவித்து இருப்பது மூலம் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜா​ஹிட் ஹமிடி தேர்தல் கோட்பாட்டை மீறியுள்ளார் என்று தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்கும் பெர்சிஹ் குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் கால​த்தில் இது போன்ற நிதி ஒதுக்கீட்டை அரசியல் கட்சிகள் வழங்க முடியாது, அது நியாயமான செயலும் அல்ல என்று பெர்சேவின் தலைவர் தாமஸ் டன் கூறுகிறார்.

நாட்டின் துணைப்பிரதமர் என்ற முறையில் மக்களுக்கு நிதி அளிக்கவும், அவர்களுக்கு உதவவும் ஜாஹிட்டிற்கு உரிமையுள்ளது என்றும் அது குற்றம் ஆகாது என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி. ஆர்.எம் கூறியுள்ளது. உண்மைதான். இத்தகைய உதவிகளை செய்வதற்கு துணைப்பிரதமருக்கு உரிமையுண்டு. ஆனால், தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் இக்காலகட்டத்தில் இத்தகைய நடைமுறைகளை அனுமதிப்பது தார்​மீக அரசியல் நெறிமுறைகளுக்கு முரணானதாகும் என்று தாமஸ் டன் வாதிட்டுள்ளார்.

Related News