Oct 24, 2025
Thisaigal NewsYouTube
புதிய சட்டத்தை இயற்றவோ அல்லது ஏற்கனவே உள்ள சட்டத்தை திருத்தவோ திட்டமிடவில்லை
அரசியல்

புதிய சட்டத்தை இயற்றவோ அல்லது ஏற்கனவே உள்ள சட்டத்தை திருத்தவோ திட்டமிடவில்லை

Share:

டிச. 8-

ஆஸ்திரேலியா போன்று மலேசியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வயது வரம்பை நிர்ணயிக்க புதிய சட்டத்தை இயற்றவோ அல்லது ஏற்கனவே உள்ள சட்டத்தை திருத்தவோ திட்டமிடவில்லை என தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil கூறினார்.

ஒவ்வொரு சமூக ஊடகத் தளமும் தங்கள் பயனர்கள் தவர்களது வயது வரம்பைப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் வகையில் சரிபார்ப்பு செயல்முறையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்துவார்.

2025 ஜனவரி 1 முதல், சமூக ஊடக தளங்களுக்கு உரிமம் வழங்கும் செயல்முறை தொடங்கும். அதன் பிறகு, பயனர்களின் வயதை சரிபார்க்கும் செயல்முறையை தளங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அவர்கள் இதைச் செய்யவில்லை என்றால், சமூக ஊடகத் தளங்களுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

சமீபத்தில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இளைஞர்களும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றியது ஆஸ்திரேலியா. இதுபோன்ற நடவடிக்கை எடுத்த முதல் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

அடுத்த ஆண்டு இறுதியில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, 16 வயதுக்குட்பட்டவர்கள் TikTok, Instagram, Snapchat, Facebook, Reddit, X போன்ற தளங்களைப் பயன்படுத்த முடியாது. இந்த நடவடிக்கை இளைஞர்களின் மனநலத்தையும் நல்வாழ்வையும் பாதுகாக்க அவசியம் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தலைமையிலான அரசு கூறியது.

Related News