அலோர் ஸ்டார், செப்டம்பர்.12-
மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடு என்றால், தேர்தல்களின் போது, மலாய்க்காரர்கள் அல்லாதோரும், சில நாடாளுமன்ற தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது.
இஸ்லாம் அனைவருக்கும் பொதுவானது, நியாயமானது என்பதை இஸ்லாம் அல்லாதோருக்கும் புரிய வைப்பது தான் சவாலான ஒன்று என்று பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமிமி தையிப் அஸாமுடின் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், நாம் எப்படி இஸ்லாமைப் பாதுகாக்கிறோமோ அதே போல் அவர்களும் தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதை இஸ்லாம் தலைமைத்துவம் ஒரு போதும் தடுக்காது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்றும் அஃப்னான் ஹமிமி குறிப்பிட்டுள்ளார்.