உலு சிலாங்கூர், ஜனவரி.03-
நாட்டில் சீர்திருத்தங்களை ஒரே நேரத்தில் அமல்படுத்தே இயலாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.
பிகேஆர் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் அதனைச் செய்ய இயலாது என்பதையும் அவர் விளக்கினார். அதே வேளையில் அதில் இருக்கக்கூடிய சவால்கள் குறித்து இன்று நடைபெற்ற பிகேஆர் கட்சியின் 27 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் விவரித்தார்.
பிகேஆர் கட்சி நாடாளுமன்றத்தில் தனித்துச் செயல்படக்கூடிய அறுதிப் பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை என்பதை அன்வார் சுட்டிக் காட்டினார். தற்போதைய அரசு பல்வேறு கட்சிகளைக் கொண்ட ஓர் ‘ஒற்றுமை அரசாங்கம்' என்பதால், அனைத்து முடிவுகளையும் ஒருதலைப்பட்சமாக எடுக்க முடியாது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.








