நவ. 23-
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டார்.
காஸாவில் நிகழ்ந்து வரும் போர்க் குற்றச்செயல்களுக்காக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய முன்னாள் தற்காப்பு அ மைச்சர் Yoav Gallant ஆகியோருக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணைப் பிறப்பித்து இருப்பது தொடர்பில் துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும், அவரின் முன்னாள் தற்காப்பு அமைச்சருக்கும் கைது ஆணைப்பிறப்பிக்கப்பட்டு இருப்பது ஒரு சரியான நடவடிக்கையாகும் என்று துன் மகாதீர் வர்ணித்துள்ளார்.
போர்க்குற்றவாளிகள் என்ற முறையில் அவ்விருவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதுதான் முறையான தண்டனையாக இருக்க முடியும் துன் மகாதீர் கேட்டுக்கொண்டார்.








