Aug 28, 2026
Thisaigal NewsYouTube
ரஃபிஸி மீது சைஃபுடின் கருத்து: சதி என்ற பேச்சுக்கே இடமில்லை
அரசியல்

ரஃபிஸி மீது சைஃபுடின் கருத்து: சதி என்ற பேச்சுக்கே இடமில்லை

Share:

பக்காத்தான் ஹரப்பான் மாநாட்டைக் குலைக்க ரஃபிஸி ரம்லி முயல்வதாகக் கூறப்படும் புகார்களை அக்கூட்டணியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நிராகரித்துள்ளார். வரும் ஞாயிறன்று பக்கத்தான் ஹராப்பான் மாநாடு நடைபெறும் அதே நேரத்தில், ரஃபிஸியும் அவரது ஆதரவாளர்களும் தங்களின் "புதிய அரசியல் திசை" குறித்து அறிவிக்கவுள்ளனர்.

இது குறித்துப் பேசிய சைஃபுடின், "மலேசியா ஒரு ஜனநாயக நாடு; பேச்சுரிமை, ஒன்று கூடும் உரிமை அனைவருக்கும் உண்டு, அவர்கள் விருப்பப்படி செயல்படலாம்" என்றார்.

கடந்த 2025 மே மாதம் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்றதைத் தொடர்ந்து, ரஃபிஸியும் நிக் நஸ்மியும் தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

Related News